Highly critical of Muslims & Govt. Dinamani Editorial on anti-US protests by Muslims

தவறு! தவறு! தவறு!

 

கடந்த 5 நாள்களாக சென்னை அண்ணா சாலையில், ஒரு சில இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. தங்களது மத உணர்வைப் புண்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால், அமெரிக்காவுக்கு எதிராகச் சென்னையில் நடத்தும் இந்தப் போராட்டத்தின் மூலம் அவர்கள் என்ன சாதித்துவிடப் போகிறார்கள் என்பது புரியவில்லை.

இந்தப் போராட்டம் அமெரிக்காவுக்கு எதிரானதா? அந்தப் படத்தை தயாரித்த சாம் பாஸில் என்ற நபருக்கு எதிரானதா? இதுவரை எங்குமே வெளியாகாத திரைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட யு ட்யூப்-க்கு எதிரானதா? யாரை எதிர்க்கிறார்கள் நமது தமிழக இஸ்லாமியச் சகோதரர்கள்?

எங்குமே திரைக்கு வராத, நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய தவறான சில கருத்துகளை முன்வைக்கும் “இன்னோசென்ஸ் ஆப் முஸ்லிம்’ என்ற ஆட்சேபணைக்குரிய திரைப்படம் யூ ட்யூப்பில் தொடர்ந்து, புதன்கிழமை வரையிலும்கூட, மின்னூட்டம் பெற்றுள்ளது. அதை யூ ட்யூப்பிலிருந்து அகற்ற வேண்டும் என்று எகிப்து மற்றும் லிபியா நாடுகள் கோரிக்கை விடுத்தபோதும், அந்நிறுவனம் அதனை ஏற்கவில்லை. “அந்தக் காட்சிக் கோப்புகள் எங்கள் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறாமல் இருக்கிறது’ என்பதுதான் அந்த இணையதள நிறுவனம் தெரிவித்த பதில்.

இந்தப் படத்தை தயாரித்து, கதை எழுதி, இயக்கியதாகச் சொல்லப்படும் சாம் பாஸில் என்பவர் இதுவரை ஹாலிவுட்டில் படம் எடுத்தது இல்லை. அங்கே இப்படியொரு நபரே கிடையாது. இவர் அமெரிக்காவில்தான் இந்தப் படத்தைத் தயாரித்தார் என்பதற்கும் சான்றுகள் இல்லை. அவர் 50 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் தயாரித்த இந்தப் படத்துக்கு பத்து யூதர்கள் பணம் அளித்ததாகச் சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை என்று ஹாலிவுட் திரையுலகம் தெரிவித்துவிட்டது.

இந்தத் திரைப்படம், இஸ்லாமியர்கள் மத்தியில் ஒரு அமைதியின்மையை உருவாக்கி, அதன் மூலம் கலவரங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும், சாம் பாஸில் என்பது ஒரு புனைப் பெயர் என்பதும்தான் இதுவரை உறுதியாகியுள்ள தகவல்கள்.
÷இந்தப் படத்தைத் தயாரிக்க அமெரிக்க அரசு எந்த வகையிலும் உதவியிருக்கவில்லை என்பதைப் பார்க்கும்போது அமெரிக்கத் தூதரக அலுவலகத்தைத் தாக்குவதிலும்கூட நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால், ஆட்சேபணைக்குரிய அந்தத் திரைப்படத்தை இணையதளத்திலிருந்து அகற்ற வேண்டும் என்கின்ற கோரிக்கையையும் அதற்கான எதிர்ப்பையும் முஸ்லிம் அமைப்புகள் முன்வைப்பதே சரியான போராட்ட முறையாக இருக்கும்.

அமெரிக்காவில் உலக வர்த்தகக் கட்டடம் அல்காய்தா-வினரால் இடிக்கப்பட்டபோது, அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை விமர்சனம் செய்து “ஃபாரன்ஹீட் 9/11′ என்ற குறும்படம் வெளியானது. இதற்குப் பல விருதுகள் கிடைத்தன. அமெரிக்காவில் வாழும் அனைத்து முஸ்லிம்களையும் சந்தேகக் கண்ணுடன் அமெரிக்கா பார்க்கிறது என்பதை மையமாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இஸ்லாமியச் சகோதரர்களில் எத்தனைப் பேர் பார்த்தனர்? தனக்கு முஸ்லிம் பெயர் இருப்பதாலேயே ஒரு மனிதன் அமெரிக்காவில் எத்தகைய இடையூறுகளை சந்திக்கின்றான் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட “மை நேம் இஸ் கான்’ திரைப்படத்தை பார்த்த இஸ்லாமியச் சகோதரர்கள் எத்தனைபேர்? திரைக்கு வராத, தாங்களும் அதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வராத படங்களை யாரோ சொல்கிறார்கள் என்று எதிர்ப்பது எந்தவிதத்தில் நியாயம்?

அமெரிக்கத் தூதரகத்தின் மீதான தாக்குதல் ஒருநாள் மட்டுமே நடைபெற்றிருந்தால் அதை உணர்ச்சியின் எழுச்சியால் ஏற்பட்ட மனக்கொந்தளிப்பாகக் கருதலாம். ஆனால் தொடர்ந்து 5வது நாளாக அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிர்ப்பு என்ற பெயரால் அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைப்பதும், ஐந்து நாள்களாகப் பொதுமக்களை அவதிக்குள்ளாக்குவதும் ஏன் என்பதுதான் புரியவில்லை.
÷முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை விமான நிலையத்தில் பரிசோதனைக்கு உள்படுத்திய போதும், அமெரிக்காவில் ஒரு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காகச் சென்ற நடிகர் ஷாரூக் கானை பரிசோதனைக்கு உள்படுத்தியபோதும் இந்திய முஸ்லிம்கள் மனக்கொதிப்புக்கு ஆளாகவில்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது, இந்தப் போராட்டம் அரசியல் காரணிகளைக் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சில இஸ்லாமிய அமைப்புகளின் அழைப்பை ஏற்று அண்ணா சாலையை மறிக்கும் இஸ்லாமியச் சகோதரர்கள் ஒன்றை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அண்ணா சாலையை மறிப்பதும், போலீஸ்
தடியடி நடத்துவதும் உலகம் முழுதும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய தவறான அணுகுமுறையால், அனைத்து இஸ்லாமியர்களும் இப்படித்தான் போலும் என்கின்ற தவறான கண்ணோட்டத்தை அது உருவாக்கும் என்பதை ஏன் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உணரவில்லை?

அது இந்து அமைப்புகளாக இருந்தாலும், இஸ்லாமிய அமைப்புகளாக இருந்தாலும் அவர்களுக்குத் தரப்பட்டிருக்கும் பேச்சு சுதந்திரத்தையும், வழிபாட்டு சுதந்திரத்தையும், பொதுமக்களை பாதிக்கும் விதத்தில் பயன்படுத்தினால் சட்டம் தனது கடமையைச் செய்ய வேண்டும். உணர்ச்சியைத் தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேட முயலும் யாராக இருந்தாலும் அவர்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றி நிறுத்தப்படாவிட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
÷அரசியல்வாதிகள் மெüனம் காக்கிறார்கள், சரி. ஊடகங்கள் ஏன் இந்தத் தவறான அணுகுமுறையை, அவசியமில்லாத போராட்டத்தைக் கண்டிக்கத் தயங்குகின்றன?

 

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=663927&SectionID=132&MainSectionID=132&SEO&Title

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s