Portrayal of Hindu Priests & Christian Priests in Tamil Movies (Tamil)

நண்பர் ஒருவருடன் நேற்று தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தேன். நல்ல தெய்வ பக்தர். பிராம்மண சமூகத்தை சேர்ந்த இவர் நல்ல மனிதாபிமானி. பல அநாதை ஆசிரமங்களுக்கு உதவி செய்து வருபவர். பல நாடுகளுக்கு சென்று வந்துள்ள கொஞ்சம் பெரிய புள்ளி. ஒவ்வொரு தீபாவளிக்கும் ஐந்து அநாதை மாணவர்களுக்கு புது துணி எடுத்துக் கொடுப்பார். வெளியே தன் ஹிந்து உணர்வை யாருக்கும் காட்டிக் கொள்ளா விட்டாலும் ஹிந்து கடைகளில் மட்டுமே முடிந்தவரை எதுவும் வாங்குவார்.

அவரோடு நேற்று பெருகிவரும் மதமாற்றம் குறித்தும், அதைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, துண்டு பிரசுரங்கள் விநியோகிப்பதையும் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர் பொரிந்து தள்ளினார்,

அவர்களை தடுக்கிறது அவ்வளவு சாதாரணம் இல்லை சார் என்றார். பல வழிகளில் நேர்த்தியாக‌ நம் சமூகத்தை உடைக்கிறார்கள். அரசியலில், அரசாங்க உத்யோகங்களில், தொலைக்காட்சி நிர்வாகங்க‌ளில், சினிமாவில், தனியார் அலுவுலகங்களில், பத்திரிகைகளில், மருத்துவ மனைகளில், பள்ளிகளில், கல்லூரிகளில் என்று எல்லாவிடங்களிலும் வியாபித்து இருக்கிறார்கள் என்றார். நம்மையும் நம் கலாச்சாரத்தையும், நம் சமூகங்களையும் ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு மிக சிறந்த முறையில் திட்டமிட்டு உடைகிறார்கள். என்றார். கூடவே ஒரு அனுபவத்தையும் சொன்னார்.

ஒரு மாதம் முன்பு இவர் உறவினர் வீட்டுக்கு வந்த சில பெந்தகோஸ்டு மத வியாபாரிகள் சொன்னார்களாம். “பாருங்கள் உங்கள் சமூகத்த்தை எத்தனை கேவலமாக சித்தரிக்கிறார்கள் ? உங்களுக்கு எந்த சலுகையும் இல்லை. ஆனால் யேசுவை ஏற்றுக் கொள்பவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கிறது. பள்ளிகளில் ஸ்காலர்ஷிப்பில் படிக்க வைக்கிறோம். வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. பிராமனர்களை போலவே யேசுவும் எந்த உயிருக்கும் துன்பம் தரக்கூடாது என்று போதித்துள்ளார். இதனால் நிறைய பிராமனர்கள் இப்போது மாறி வருகிறார்கள். ஏன் சாருஹாசன் கூட மாறிவிட்டார் உங்களுக்கு தெரியாதா ?” என்றார்களாம்.

அவர் சொன்னது என்னை திகைப்பூட்டியது ? தாழ்த்தபட்டவர்களை உங்களை ஒதுக்குகிறார்கள் என்று சொல்லி மதவியாபரம் செய்யும் மிஷநரிகள் பிராமணர்களிடம் எப்படி தந்திரமாய் பேசியிருக்கிறார்கள் பாருங்கள் !!

அவர் சொன்னது ஒவ்வொன்றும் உண்மைதான். வெகுஜன ஊடகமான சினிமாவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பாதிரியாரை பரம சாது போல காட்டுகிறார்கள். ஆனால் ஒரு கோவில் அர்ச்சகரை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அத்தனை கேவலப் படுத்துகிறார்கள். இதனால் அந்த தொழிலை ஏற்க, சுயமரியாதை உள்ளவர்கள் வருவதில்லை. வேறு வழியே இல்லாமல் மிகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் மட்டுமே இன்று அர்ச்சகர்களாக வருகிறார்கள். அவர்களுக்கு பெண் கொடுக்க கூட யாரும் தயாரில்லை. இத்தகைய சூழ்நிலையில் எந்த அர்ச்சகருக்கு ஆன்மிக சேவையில் ஈடுபாடு வரும் ? காலை முதல் இரவு வரை அவர்கள் கையாள வேண்டிய சடங்குகள் வேறு எத்தனையோ இருக்கிறது.

மற்றொரு பக்கம் பாதிரியார் வெள்ளை உடையில் பரம சாதுக்களாக காட்டப்படுகிறார்கள். காதல் ஜோடிகளை சேர்த்து வைக்கிறார். சர்ச்சுகளில் தெய்வீக தன்மை இருப்பது போல் காட்டப்படுகிறது. சர்ச்சுகளில் வழிபடுபவர்கள் மிகவும் அர்ப்பனிப்பு உணர்வோடு இருப்பதாய் காட்டப்படுகிறது. ஆனால் கோவிலுக்குள் பெரும்பாலும் பெண்கள் பக்தியோடு செல்வதாகவும், ஆண்கள் அங்கு அவர்களை காதலிப்பதற்க்காக ஒரு நாத்திக ரீதியில் செல்வதாகவும் சித்தரிக்கப்படுகிறது. பெண்களை கவர்வதற்கு ஏற்ற ஒரு இடமாகவே கோவில்கள் காட்டப்படுகின்றன.

திருமணங்களும் அவ்வாறே காட்டப்படுகின்றன. சர்ச்சில் கட்டுக் கோப்பாக திருமணங்கள் நடக்கிறதாம். பாதிரியார் இரு தரப்பு சம்மதம் கேட்டு இறைவனின் ஆசிர்வாதத்தோடு திருமணத்தை நடத்துகிறார். ஆனால் ஹிந்து திருமணங்கள் மிக கேவலமாக சித்தரிக்கப்படுகின்றன. “யோவ் ஐயரே சீக்கிரம் மந்திரத்தை சொல்லய்யா” என்கிறான் கதாநாயகன். பல திரைப்படங்களில் இந்த காட்சிகள் புரோகிதர்களை மிகவும் மட்டமாக சித்தரிக்கின்றன. இன்று பிராமண‌த் தன்மைக்கு உண்டான கட்டுக் கோப்புகளும், யாரையும் சார்ந்திராத சுய ஒழுக்கமும் அற்று போய் கொண்டிருக்கிறது. இந்த நிலைக்கு நாம் அனைவரும் காரணம் அல்லவா ? தன் சமூகத்தை எதிர்த்து ஏதேனும் சித்தரித்து திரைப்படம் எடுத்துவிட்டால் பொங்கி எழும் வெகுஜன சமுதாயங்கள் இவற்றை பாராமுகமாக இருப்பதோடு இதை ரசிப்பது. ஹிந்து ஒற்றுமைக்கு எந்த விதத்தில் பயன்படும் ? குறைகள் எந்த சமுதாயத்தில் தான் இல்லை ? நமக்குள் ஏற்படும் பிளவுகளில் பயன் அடைவது யார் ?

இது நம் இளைஞர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும் ? பெரும்பாலான கோவில்களில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதற்கு இதுவும் ஒரு காரணம் அல்லவா ?

 

Source: https://www.facebook.com/groups/576803655716073/permalink/586502191412886/

Posted by Sarvam Krishnarpanam

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s